ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் ‘நாட்டு நாட்டு’ பாடல்... ‘பேச வார்த்தைகள் இல்லை’ - படக்குழுவினர் நன்றி தெரிவித்த ராஜமௌலி !

rrr

ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வானதற்கு இயக்குனர் ராஜமௌலி படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

rrr

இந்த பாடல் ஆஸ்கர் பரிந்துரைக்கு சென்றுள்ளதற்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் என் படத்தில் பாடியதற்காக என் பெத்தன்னாவுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. என்னால் மேலும் கேட்க முடியாது. நான் தற்போது ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரணை விட தீவிரமாக நாட்டு நாட்டு பாடலை பாடி வருகிறேன். 

rrr

இதை சாத்தியமாக்கிய சந்திர போஸ், பிரேம் மாஸ்டர், பைரவா, ராகுல் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

 

 


 

Share this story