தொடங்குகிறது ‘புஷ்பா 2’ படப்பிடிப்பு... ஹாப்பியான அல்லு அர்ஜூன் ரசிகர்கள் !

pushpa 2

 அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என்ற அப்டேட் வெளியாகியுள்ளது. 

அல்லு அர்ஜூன் மற்றும் சுகுமார் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

pushpa 2

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் மிரட்டியிருந்தார். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். 

கடந்த சில மாதங்களாக திரைக்கதை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இயக்குனர் சுகுமார், தற்போது அந்த பணியை முடித்துவிட்டாராம். அதனால் வரும் நவம்பர் 13-ஆம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்கவுள்ளாராம். தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 15 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. ‘புஷ்பா 2’ படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 
 

Share this story