ரஷ்யாவிலும் மாஸ்காட்டும் ‘புஷ்பா- தி ரைஸ்’ – வசூல் இத்தனை கோடியா!.......

photo

செம்மர கடத்தலை மைய்யமாக வைத்து உருவானபுஷ்பா தி ரைஸ்திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிகண்டதுவிறுவிறுப்பான காட்சிகள், மிரட்டலான வில்லன்கள், அதிரடி வசனம், மனதை கவரும் பாடல்கள் என படத்தை பற்றி கூறிகொண்டே போகலாம்.

photo

இதையடுத்து படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறதுஇந்த நிலையில் படத்தின் முதல் பாகத்தை கடந்த மாதம் ரஷ்யமொழியில் டப் செய்து வெளியிடப்பட்டதுஅங்கும் புஷ்பா திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற்றுள்ளது. சுமார் 700க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து அங்கு வெற்றிகரமாக ஓடிவரும் இந்த திரைப்படம் 1 கோடி ரூபிள்கள் வசூல் செய்துள்ளது, அதாவது இந்திய மதிப்புபடி 11 கோடியை கடந்து வசூலாகியுள்ளது. தொடர்ந்தும் இந்த படம் வசூலை வாரி குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

photo

புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தானா, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக சொல்றியா மாமா…” பாடலுக்கு சாம் எக்குதப்பாக ஆட்டம் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story