‘ஆர்ஆர்ஆர்’ இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது... குவியும் வாழ்த்துக்கள் !

mm keeravani

‘ஆர்ஆர்ஆர்’ இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு துறையிலும் சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சாதனை புரிந்தவர்களுக்கு மூன்று பிரிவுகளாக அந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டுக்கான விருதுகள் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

mm keeravani

இந்நிலையில் இந்த ஆண்டு 6 நபர்களுக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 91 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தெலுங்கில் பிரபல இசையமைப்பாளராக இருக்கும் கீரவாணி, தெலுங்கு, தமிழ் என பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீபகாலமாக அவர் இசையில் உருவாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ராஜமெளலி இயக்கிய ‘நான் ஈ’, ‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய படங்களில் சிறந்த இசையை கொடுத்துள்ளார். இவர் இசையில் உருவான ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருது பெற்றுள்ளது. அதேபோன்று ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. 

இதுதவிர நடிகை ரவீனா டான்டனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளளது. தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் ஹூசைன் மற்றும் பிரபல பாடகி வாணி ஜெயராம் ஆகிய இருவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

Share this story