‘இப்போது நான் கடவுளை பார்த்தேன்’ - ஸ்பீல்பெர்க்கை சந்தித்த மகிழ்ச்சியில் ராஜமௌலி !

rajamouli

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க்கை இயக்குனர் ராஜமௌலி சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

சினிமா உலகின் சூப்பர் இயக்குனராக இருப்பவர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். ‘ஜுராசிக் பார்க்’ உலகத்தை காட்டி உலக ரசிகர்களின் விருப்பமான இயக்குனராக உள்ளார். அவர் இயக்கத்தில் வெளியான ‘ரைடர்ஸ் ஆப் த லாஸ்ட் ஆர்க்’, ‘ஈ.டி’, ‘இண்டியானா ஜோன்ஸ்’, ‘ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்’, ‘த லாஸ்ட் வேர்ல்டு - ஜுராசிக் பார்க்’ ஆகிய இன்றைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

rajamouli

பல சினிமா இயக்குனர்களுக்கு முன்னோடியாக இருக்கும் அவரை, இயக்குனர் ராஜமௌலி சந்தித்து பேசியுள்ளார். ஸ்பீல் பெர்க்கை பார்த்து ஆச்சரித்துடன் கன்னத்தில் ராஜமௌலி கை வைத்துள்ளார். அப்போது ‘நான் இப்போது கடவுளைப் பார்த்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது இசையமைப்பாளர் கீரவாணியும் உடனிருந்துள்ளார். இது குறித்து புகைப்படங்களை ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

rajamouli

‘பாகுபலி’ படத்திற்கு பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரை வைத்து ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை இயக்கியிருந்தார் ராஜமௌலி. கடந்த ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டடித்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் பாடலான ‘நாட்டு நாட்டு’ -க்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில் தான் ஸ்பீல் பெர்க்கை ராஜமௌலி சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story