ராஷ்மிகா மந்தனாவிற்கு தடையா ?.. தீயாய் பரவும் தகவலால் பரபரப்பு !

rashmika mandana

நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு சினிமாவில் தடை விதிக்கப்பட இருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட நடிகையான இவர், ‘கிர்க் பார்ட்டி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து ‘கீதாகேவிந்தம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். தற்போது தமிழில் விஜய்யுடன் இணைந்து ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். 

rashmika mandana

இந்நிலையில் ராஷ்மிகாவிற்கு கன்னட சினிமாவில் திடீரென தடை விதிக்கப்பட இருப்பதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. இதனால் கன்னடத்தில் ‘வாரிசு’ வெளியீடும் தடைப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான மறைமுக வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கு காரணம் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த ராஷ்மிகா, தனது முதல் படமான ‘கிர்க் பார்ட்டி’ பற்றி பேசும் போது படத்தின் தயாரிப்பாளர் குறித்து பேசவில்லை. அதேபோன்று படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி பற்றியும் பேசவில்லை. அதேநேரம் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘காந்தாரா’ குறித்து ஒரு வார்த்தை கூட சமூக வலைத்தளத்தில் பதிவிடவில்லை.

இதற்கிடையே ரிஷப் ஷெட்டியை தான் ராஷ்மிகா திருமணம் செய்யவிருந்தார். தெலுங்கில் பிரபலமானதால் நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணத்தை நிறுத்தினார். இப்படி அடுக்கடுக்கான புகார்கள் ராஷ்மிகா மீது எழுந்துள்ளது. தன்னை வளர்ந்து விட கன்னட சினிமாவையே ராஷ்மிகா புறக்கணிக்கிறார் என்று ரசிகர்கள் குற்றச்சாட்டுகின்றனர். இந்த காரணங்களால் ராஷ்மிகாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி கன்னட சினிமா உலகம் மறைமுக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. 

Share this story