சமந்தாவின் ‘சகுந்தலம்’ டிரெய்லர் எப்போது ?... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

Shaakuntalam

சமந்தாவின் ‘சகுந்தலம்’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

புராண காதல் காவியமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘சகுந்தலம்’. காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ‘ருத்ரமா தேவி’ படத்தின் இயக்குனர் குணசேகரன் இயக்கியுள்ளார்.  இந்த படத்தில் சகுந்தலை என்ற முதன்மை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். 

Shaakuntalam

கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ்மோகன் நடித்துள்ளார். வரலாற்று புராண காதல் காவியமாக உருவாகியுள்ள இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். 

ஏற்கனவே டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் வரும் ஜனவரி 9-ஆம் தேதி மதியம் 12.06 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story