உலக அளவில் 33 கோடி வசூல்.. பட்டையை கிளப்பும் சமந்தாவின் ‘யசோதா’

Yashoda
 சமந்தாவின் ‘யசோதா’ படத்தின் உலக அளவிலான வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. 

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யசோதா’. வாடகைத் தாயாக இருக்கும் சமந்தா, எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி, சஸ்பென்ஸ் த்ரில்லரில் இப்படம் உருவாகியுள்ளது. மருத்துவத் துறையில் நடைபெறும் குற்றங்களை தைரியத்துடன் எதிர்கொள்ளும் கர்ப்பிணி பெண்ணாக சமந்தா இந்த படத்தில் நடித்துள்ளார். 

Yashoda

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை  ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இணைந்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 4 கோடியும், இரண்டாவது நாளில் 5 கோடியும் ஒட்டுமொத்தமாக இதுவரை 10 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் 33 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது படக்குழுவினரை உற்சாகமடைய செய்துள்ளது.  

Share this story