வாடகைத் தாயாக நடித்துள்ள சமந்தா.. ‘யசோதா’ டிரெய்லர் வெளியீடு !

Yashoda Trailer

 சமந்தாவின் ‘யசோதா’ படத்தின் அடித்து நொறுக்கும் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

நடிகை சமந்தா வித்தியாசமான கதைக்களத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘யசோதா’. வாடகைத் தாயாக இருக்கும் சமந்தா, எதிர்கொள்ளும் சவால்களை மையப்படுத்தி, சஸ்பென்ஸ் த்ரில்லரில் இப்படம் உருவாகியுள்ளது. மருத்துவத் துறையில் நடைபெறும் குற்றங்களை தைரியத்துடன் எதிர்கொள்ளும் கர்ப்பிணி பெண்ணாக சமந்தா இந்த படத்தில் நடித்துள்ளார். 

Yashoda Trailer

இந்த படம் வரும் நவம்பர் மாதம் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சமந்தா ஆக்ஷனில் அடித்து நொறுக்கும் காட்சிகளும், வசனங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

Yashoda Trailer

இந்த படம் 5 மொழிகளில் உருவாகியுள்ளதால் படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சூர்யாவும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவும், இந்தியில் வருண் தவான், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹனீஷ் நாராயண் இணைந்து இயக்கி வருகின்றனர். இந்த படத்தில் சமந்தாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

 

Share this story