சந்தீப் கிஷின் - விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மைக்கேல்’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

Michael

சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மைக்கேல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் திரைப்படம் 'மைக்கேல்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை செளத்ரி தயாரித்து வருகிறார். முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சந்தீப் கிஷனுடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.‌

 Sandeep Kishan

இவர்களுடன் இயக்குனர் கெளதம் மேனன் வில்லனாகவும் மற்றும் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

Sandeep Kishan

நிலையில் இப்படத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Share this story