தள்ளிப்போகும் ஷங்கர் - ராம் சரண் படம்... ரசிகர்கள் ஏமாற்றம் !

rc 15

ஷங்கர் மற்றும் ராம் சரண் கூட்டணியில் உருவாகும் ‘ஆர்சி 15’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘வாரிசு’ படத்தை தயாரித்த தில் ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன் நிறுவனம் சார்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆர்சி 15’. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது.  இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

rc 15

இந்த படத்தில் நடிகர் ராம் சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். தேர்தல் ஆணையத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாகி வருகிறது. இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

rc 15

தற்போது ‘இந்தியன் 2’ படத்தையும் கமல் இயக்கி வருவதால், இரண்டு படத்தின் பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. அதனால் ‘ஆர்சி 15’ படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘ஆர்சி 15’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்முடன் காத்திருந்தனர். ஆனால் படத்தின் விஷூவல் எபெக்ட்ஸ் மற்றும் எடிட்டிங் பணிகள் அதிகமாக இருப்பதால் திட்டமிட்டபடி முடியாது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனால் படத்தை அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியிட தில் ராஜூ திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

Share this story