காதலியை கரம்பிடிக்கும் சர்வானந்த்.. நேரில் வாழ்த்திய பிரபல தெலுங்கு நட்சத்திரம் !

sharwanand

பிரபல தெலுங்கு நடிகர் சர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

தெலுங்கில் பிரபல நடிகராக இருப்பவர் சர்வானந்த். தமிழிலும் நடித்து வரும் அவர், 'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு 'கணம்' படத்தில் நடித்திருந்தார். அம்மா - மகன் சென்ட்டிமென்ட்டை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து புதிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

sharwanand

இதற்கிடையே நீண்ட நாட்களாக நடிகர் சர்வானந்த் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி தனது நீண்ட காதலியான அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக ரக்ஷிதா ரெட்டியை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்பட்டது. ரக்ஷிதா ரெட்டி ஆந்திராவின் முன்னாள் அமைச்சர் ஒருவரின் பேத்தியாவார். 

இந்நிலையில் சர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.‌ எளிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர். அதோடு சர்வானந்தின் நண்பரான நடிகர் ராம் சரண், அவரது மனைவி உபாசனாவுடன் கலந்துக்கொண்டார். சர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டி திருமணம் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share this story