தெலுங்கில் ‘வாரிசு’ ப்ளாக் பஸ்டர் ஹிட்... கேக் வெட்டி கொண்டாடிய தில் ராஜூ !

vaarasudu

தெலுங்கில் ‘வாரிசு’ ப்ளாக்பஸ்டர் வெற்றிப் பெற்றதையடுத்து தயாரிப்பாளர் தில் ராஜூ கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். 

வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இப்படம் தமிழில் கடந்த 11-ஆம் தேதியே திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

vaarasudu

இதையடுத்து தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரில் இன்று வெளியானது. இந்த படம் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளில் ரசிகர்கள் விஜய்யை கொண்டாடி மகிழ்ந்தனர். பொதுவாக தமிழ் மற்றும் மலையாளத்தில் அதிக ரசிகர்கள் வைத்துள்ள விஜய், இதன் மூலம் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை விரிவுப்படுத்தியுள்ளார் என தெரிகிறது. 

vaarasudu

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் தில் ராஜூ மற்றும் இயக்குனர் வம்சி கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது வம்சிக்கு தில் ராஜூ கேக் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதோடு தனது அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து தில் ராஜூ தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

Share this story