ஹாய் நான்னா படத்திலிருந்து புது பாடல் ரிலீஸ்....

நானியின் 30வது படமாக தயாராகியுள்ள ‘ஹாய் நான்னா’ படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சவுர்யா இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘ஹாய் நான்னா’. இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நானி கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் இணைந்து மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கிறார். இவர் சீதா ராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராகி வருகிறது. படத்தின் அப்டேட் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் தற்போது படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பாடல் வெளியிட்டுள்ளார். வரும் டிசம்பர் 21-ம் தேதி ஹாய் நான்னா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது