‘ஆடுஜீவிதம்’ ரிலீஸ் தேதி இதோ!

photo

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஆடுஜீவிதம்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமினின் ‘ஆடுஜீவிதம்’ நாவலை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘ஆடுஜீவிதம்’. கேரளாவிலிருந்து அரபு நாட்டிற்கு வேலைக்கு செல்லும் இருவர் அங்கு சிக்கிக்கொண்டு ஆட்டுப்பட்டியில் ஆடுமேய்க்கும் வேலை செய்கின்றனர். அங்கு அவர்கள் என்னமாதிரியான கஷ்டங்களை அனுபவித்தனர் என்பதுதான் கதை.

 இந்த படத்தை ப்ளஸ்ஸி இயக்கியுள்ளார். படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கே.எஸ் சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிருத்விராஜின் அசத்தலான நடிப்பில் தயாராகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படம் வரும் 2024 ஆம் ஆண்டு, ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

Share this story