ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ள ‘ஸ்பை’... டெல்லியில் வெளியிடப்பட்ட டீசர் !

நடிகர் நிகில் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஸ்பை’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிரபல படத்தொகுப்பாளரான கேரி எச்.எச் இயக்குனரான அறிமுகமாகும் திரைப்படம் ‘ஸ்பை’. இந்த படத்தில் நடிகர் நிகில் கதாநாயகனாகவும், ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இரண்டாவது கதாநாயகியாக சானியா தாக்கூர் நடித்துள்ளார். இவர்களுடன் ஆர்யன் ராஜேஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் அபினவ் கோமடம், மகரந்த் தேஷ் பாண்டே, ஜிஷூ செங் குப்தா, நித்தின் மேத்தா, ரவி வர்மா, கிருஷ்ணா தேஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஸ்ரீ சரண் பக்கலா மற்றும் விஷால் சந்திரசேகர் இணைந்து இசையமைத்து வருகின்றனர். ஆக்ஷன் கலந்து த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ED எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
மறைக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் மரணம் குறித்த ரகசியங்களை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஜூன் 29-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள நேதாஜி சிலையின் முன்பு இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்து.