பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் .. மிரட்டலாக உருவாகியிருக்கும் ‘புஷ்பா 2’ கிளிம்ஸ் !

pushpa 2

 நடிகர் அல்லு அர்ஜூன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க ‘புஷ்பா 2’ முடிவு செய்துள்ளது. 

அல்லு அர்ஜூனின் மிரட்டலான நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘புஷ்பா’. செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தை முன்னணி இயக்குனர் சுமார் இயக்கியிருந்தார். அல்லு அர்ஜூனின் வழக்கமான படம் போன்று இல்லாமல் வித்தியாசமான திரைக்கதை இப்படம் உருவாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. 

pushpa 2

இரு பாகங்களாக தயாரான இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்ட உருவாகும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது. 

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடர்ந்த காடுகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதையடுத்து தாய்லாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கிளிம்ஸ் வீடியோவிற்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த கிளிம்ஸ் வீடியோவிற்கான படப்பிடிப்பு நிறைவுபெற்று மிரட்டலாக வெளியாகும் என கூறப்படுகிறது. அல்லு அர்ஜூனின் பிறந்தநாளுக்கு இந்த வீடியோ ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

 

Share this story