சொகுசு கார் வாங்கிய 'பகத் ஃபாசில்' – ரூ 2.70 கோடியாம்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் பகத் ஃபாசில் ரூ.2.70 கோடி மதிப்புடைய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதுவும் கேரளத்தில் இவர்தான் முதல் நபராக வாங்கியுள்ளாராம்.
மலையாள நடிகரான பகத் ஃபாசில் அவர் தந்தை இயக்கிய ‘கையெத்தும் தூரத்து’ படத்தின் மூலமாக சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார். தொடர்ந்து மலையாளத்தில் பல படங்கள் நடித்தார். தமிழில் சிவகார்த்திகேயனின் ‘வேலைகாரன்’ படத்தின் மூலமாக அறிமுகமானது. தொடர்ந்து சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து கோலிவுட்டில் நன்கு பிரபலமாக உள்ளார். அதுமட்டுமல்லாமல் தலைவர் 170 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் பகத் . இந்த நிலையில் பகத் ‘ லேண்ட் ரோவர் டிபென்டர் 90 வி8’ ரக சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ. 2.70 கோடி என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கேரளாவில் இந்த காரை வாங்கிய முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.