அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமலஹாசன்.. இணையத்தை கலக்கும் புகைப்படம் !

kamal

நடிகர் கமலஹாசன் அமெரிக்கா சென்றுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. 

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது ‘பிராஜெக்ட் கே’.  இந்த படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட திரைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். உலகநாயகன் கமலஹாசன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முன்னணி இயக்குனர் நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கி வருகிறார். 

kamal

இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.  சுமார் 600 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த படம் உருவாகிறது. எதிர்காலத்தையும், கடந்த காலத்தையும் நிர்ணயிக்கும் படமாக இப்படம் உருவாகிறது. சர்வதேச அளவில் உருவாகும் இப்படம் 10 மொழிகளில் தயாராகி வெளியாகவுள்ளது.

kamal

இந்த படத்தின் தலைப்பு மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 21-ஆம் தேதி அமெரிக்காவில் வெளியிடப்படவுள்ளது. சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நடிகர்கள் பிரபாஸ், ராணா உள்ளிட்ட படக்குழுவினர் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளனர். இந்நிலையில் நடிகர் கமலஹாசனும் இன்று அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க நகர வீதிகளில் அவர் நடந்து செல்லும் புகைப்படத்தை ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. 

 

Share this story