நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இறந்ததாக வதந்தி... வீடியோ வெளியீட்டு விளக்கம் !

kota srinivasa rao
 

நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இறந்ததாக வந்த செய்திக்கு அவரே விளக்கமளித்துள்ளார். 

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 700-க்கும் மேற்பட்ட சினிமா படங்களில் நடித்துள்ளார். தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சாமி’ படத்தின் மூலம் பிரபலமானவர். அதன்பிறகு திருப்பாச்சி, கோ உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

kota srinivasa rao

இந்நிலையில் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இறந்துவிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வந்தது. இது முழுக்க முழுக்க வதந்தி என்றும், இதை யாரும் நம்பவேண்டாம் என்றும் நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் வீடியோ ஒன்றை வெளியீட்டு விளக்கமளித்துள்ளார். 

kota srinivasa rao

அதில் நான் இறந்துவிட்டதாக பரவிய செய்தி எனக்கு தெரிய வந்தது. நான் தற்போது நலமுடன் இருக்கிறேன். இதுபோன்ற போலி செய்திகளை பரப்பவேண்டாம் என்று காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன். யுகாதி பண்டிகையில் பிசியாக இருந்தபோது எனக்கு பல அழைப்புகள் வந்தது. என் இடத்தில் வேறொரு யாராவது இருந்திருந்தால் இதயத்துடிப்பே நின்றிருக்கும். பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கையில் இப்படியான வதந்திகளை பரப்பாதீர்கள் என்று கூறியுள்ளார். 


 

Share this story