பிரபல மலையாள நடிகர் 'மம்முகோயா' உடல்நலக்குறைவால் காலமானார்.

photo

பிரபல மலையாள நடிகர் மம்முகோயா இன்று காலமானார். அவருக்கு வயது 76. முதலில் நாடக கலைஞராக தனது வாழ்கையை தொடங்கிய கோயா தொடர்ந்து காமெடி நடிகராக சுமார் 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இரண்டு மாநில அரசு விருது உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் மலையாளம் கடந்து பிரெஞ்சு மொழியில் ‘பிளமென்ஸ் ஆப் பாரடைஸ்’ படத்திலும் நடித்துள்ளார்.

photo

இந்த நிலையில்  மலபுரம் மாவட்டத்தில் கால்பந்து போட்டியயை துவக்கி வைக்க சென்ற அவரை ரசிகர்கள் கூட்டம் புகைப்படம் எடுக்க சூழ்ந்துக்கொண்டது. அப்போது அவர் தனது உடல் அசௌகரியமாக இருப்பதாக கூறியுள்ளார், சில நிமிடங்களில் மைதானத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.  தொடர்ந்து அவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர் இன்று உயிரிழந்தார்.  இதனால் மலையாள திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this story