கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மலையாள சூப்பர் ஸ்டார்!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மலையாள சூப்பர் ஸ்டார்!

மலையாள நடிகர் மோகன்லால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

உலகம் முழுதும் மக்களின் வாழ்வாதாரத்தை ஆட்டிப் பார்த்த கொரோனா தற்போது தன் வேகத்தைக் குறைத்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே சிலர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மலையாள சூப்பர் ஸ்டார்!

தற்போது பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று நடிகர் மோகன்லால் கொரோனா தடுப்பூசியின் முதல் தொகுப்பை போட்டுள்ளார்.

இந்த மாதிரி பிரபலங்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வது பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது என்று பலரும் இதற்கு பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

இங்கே சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Share this story