அப்பா - மகள் உறவை பேசும் படத்தில் நானி.. 30வது படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் !

Hi Nanna

நானியின் நடிப்பில் உருவாகும் 30வது படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

Hi Nanna

தெலுங்கு நடிகர் நானி மற்றும் நடிகை மிருணாள் தாகூர் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்துள்ளனர். வைர என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஷூர்யுவ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகி வருகிறது. 

Hi Nanna

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். ‘ஹிருதயம்’ படத்தின் மூலம் பிரபலமான இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முக்கிய காட்சிகள் மும்பை மற்றும் கோவாவில் படமாக்கப்பட்டுள்ளது.

Hi Nanna

இப்படம் வரும் டிசம்பர் 21-ஆம் தேதி கிறிஸ்துமசையொட்டி வெளியாக உள்ளது. நானியின் 30வது படமாக உருவாகும் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ‘ Hi நான்னா’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படம் அப்பா - மகள் உறவை பேசும் கதைக்களம் கொண்டது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள கிளிம்ப்ஸ் வீடியோ வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story