நானியை இயக்கும் சிவகார்த்திகேய பட இயக்குனர்... விரைவில் வெளியாகும் அறிவிப்பு !
நடிகர் நானியை வைத்து புதிய ஒன்றை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனர் அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சிபி சக்கரவர்த்தி. கடந்த 2022-அம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து தனது முதல் படத்தை இயக்கினார். 'டான்' என்ற தலைப்பில் கல்லூரி கதைக்களத்தில் வெளியான அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதல் படத்திலேயே 100 கோடி வசூலை பெற்று தந்தார்.
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை இயக்குவதாகவும் இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது கைக்கூடாமல் போனது. இந்நிலையில் தெலுங்கு நடிகர் நானியை வைத்து புதிய படம் ஒன்றை சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது.
முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இருக்கிறது. தற்போது தெலுங்கு நடிகர் நானி, தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்து சிபி சக்ரவர்த்தி படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.