நடிகர் பிரபாஸூக்கு உடல்நலப் பிரச்சனை

நடிகர் பிரபாஸூக்கு உடல்நலப் பிரச்சனை

கே.ஜி.எப். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் அடுத்ததாக ‘சலார்’ திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரித்தார். பிரபாஸுடன் இணைந்து மலையாள நடிகர் ப்ரித்திவிராஜ் வில்லனாகவும், ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இப்படம் வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து, கடந்த 22-ம் தேதி இத்திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இந்நிலையில், நடிகர் பிரபாஸ் உடல் நலப்பிரச்சனையால் சினிமாவிலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது. அண்மையில் பிரபாஸூக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனால் ஏற்பட்ட வலி இதுவரை சரியாகவில்லை என்றும், இதனால் அவர் தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

Share this story