ராம் சரண் பிறந்தநாளில் செம்ம ட்ரீட் இருக்கு... ‘ஆர்சி 15’ படத்தின் செம்ம அப்டேட்

ramcharan

 நடிகர் ராம் சரணின் பிறந்தநாளையொட்டி முக்கிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளது. 

தெலுங்கில் பான் இந்தியா திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார். இந்த படத்தில் முன்னணி நடிகர் ராம் சரண் ஹீரோவாக நடிக்கிறார். ராம் சரண் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

ramcharan

இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தை மையமாக இப்படத்தின் கதை உருவாகி வருகிறது. 

இந்நிலையில் நடிகர் ராம் சரண் தனது பிறந்தநாளை வரும் மார்ச் 27-ஆம் தேதி கொண்டாடுகிறார். இதையொட்டி ‘ஆர்சி 15’ படத்தின் தலைப்பு மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுகிறது. அதேபோன்று ராம்சரணின் அடுத்தடுத்த இரண்டு படங்களின் அறிவிப்புகளும் வெளியாகவுள்ளது. அதனால் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Share this story