பிரபல கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் நடிக்கவேண்டும் - நடிகர் ராம் சரண் !

ram charan

பிரபல கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் ராம் சரண் தெரிவித்துள்ளார். 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண், பான் இந்தியா நாயகனாக வலம் வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றுள்ளது. இதனால் உலகம் அறிந்த நடிகராக ராம் சரண் மாறிவிட்டார். ஆஸ்கர் விருதுக்கு பிறகு ராம் சரணின் மார்க்கெட் எகிறி வருகிறது. 

ram charan

இந்நிலையில் பிரபல தனியார் பத்திரிக்கை நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராம் சரண் கலந்துக்கொண்டார். அதில் நீங்கள் எதிர்காலத்தில் எதுபோன்ற கேரக்டர்களில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விளையாட்டு தொடர்பான கேரக்டரில் நடிக்க ஆசைப்படுகிறேன். விளையாட்டு தொடர்பான கதைக்களங்களில் நடிப்பது எனது நீண்ட நாள் ஆசை. 

ram charan

 அப்போது இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக்கில் படத்தில் நடிப்பீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விராட் ஒரு ஆளுமைக் கொண்ட வீரராக செயல்பட்டு வருகிறார். எனக்கு அவரின் பயோபிக்கில் நடிக்க வாய்ப்பு அமைந்தால் நிச்சயமாக நடிப்பேன். என்னுடைய தோற்றமும் அவரை போன்றே தான் இருக்கிறது என்று தோன்றுகிறது என கூறினார். 

 

 

Share this story