காதலியை கரம் பிடிக்கும் ‘எங்கேயும் எப்போதும்’ பட நடிகர் –ஜெய்ப்பூரில் திருமணம்.

photo

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சர்வானந்த்.  இவர் தெலுங்கு கடந்து தமிழ் சினிமாவில், எங்கேயும் எப்போதும் , ஜே. கே எனும் நண்பனின் வாழ்கை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் ‘கணா’ என்னும் திரைப்படம் வெளியானது.  இவருக்கும் இவரது காதலியான ரக்ஷிதா ரெட்டி என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

photo

இவர்களது திருமணம் நின்றுவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் சர்வானந்த்தின் குடும்பத்தினர் அதிரடியாக திருமண தேதியை அறிவித்து அனைத்து வதந்திக்கும் முற்றிபுள்ளி வைத்துள்ளனர். அதாவது இவர்களது திருமணம் வரும் ஜூன் 3ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடக்க உள்ளதாம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

photo

2004  ஆம் ஆண்டு இடகுவா த்ரீக்கு என்னும் படத்தின் மூலமாக சினிமாதுறைக்கு வந்த சர்வானந்த், தொடர்ந்து கௌரி, ஷங்கர் தாதா எம்பிபிஎஸ், சங்கராந்தி போன்ற படங்களில் துணை நடிகராக நடித்தார். 2010ஆம் ஆண்டு சர்வானந்த் கதாநாயகனாக நடித்த பிரஸ்தானம் படம் இவரது வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து பல படங்கல் நடித்து முன்னணி நடிகர் அந்தஸ்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story