நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி!

இந்தி மற்றும் மராத்திய மொழிகளில் பிரபலமான நடிகரும் தயாரிப்பாளருமானவர் 47 வயதான ஷ்ரேயாஸ் தல்படே. ஓம் சாந்தி ஓம், கோல்மால், இக்பால் போன்ற திரைப்படங்களின் மூலமாக திரையுலகில் தனக்கென தடம் பதித்தவர் இவர்.இந்நிலையில், ஷ்ரேயாஸ் தல்படேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு தற்போது நலமுடன் இருக்கிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடனடியாக அருகில் இருந்த அந்தேரி பகுதியில் உள்ள பெல்லூவ் மருத்துவமனைக்கு இவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கிவிழுந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இரவு 10 மணி அளவில் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது.

நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி!

சிறிய இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Share this story