'கேப்டன் கூல்'லை சந்தித்த 'டொவினோ தாமஸ்' – “எல்லோருக்குமான இன்ஸ்பிரோஷன் தோனி” என புகழாரம்.

photo

மலையாளத்தின் கடந்த 2012 ஆம் ஆண்டு,’ பிரபுவின்டே மக்கள்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் டொவினோ தாமஸ். இவர் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை சந்தித்து பேசியுள்ளார், இது தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில்  அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

photo

டொவினோ தாமஸ் பதிவு செய்துள்ளதாவது, இந்நேரம் மிகவும் கூலாக கடந்தது. கேப்டன் கூல் உடன் நேரம் செலவிட்டது சிறந்த அனுபவமாக அமைந்தது. நாம் திரையில் பார்த்து போற்றிய அதே கூலான நபராகவே நேரிலும் இருந்தார். இருவரும் நிறைய பேசி மகிழ்ந்தோம். இந்த வாய்ப்புக்காக உண்மையிலேயே நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். அனைவருக்கும் சிறந்த ரோல் மாடல். உங்கள் பயணம் மென்மேலும் மிளிர வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து இருவரும் சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

photo


Share this story