காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மலையாள நடிகர் 'வினோத் தாமஸ்'.

photo

மலையாளத்தில் பிரபல நடிகரான வினோத் தாமஸ், காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திரையிலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கேட்டயம், பம்படி பகுதியில் தனியார் ஓட்டல் ஒன்றின் பார்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக கார் ஒன்று நின்றுகொண்டிருப்பதை பார்த்த ஓட்டல் ஊழியர்கள் அதன் அருகில் சென்று பார்த்த போது அதில் ஒருவர் இருப்பது தெரியவந்தது. அவரிடம் கதவை தட்டி விசாரிக்கலாம் என பார்த்த ஊழியர்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை உடனே, இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

photo

மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்த நபர் மலையாள நடிகர் வினோத் தாமஸ் என்பது தெரிய வந்தது. இவர் அய்யப்பனும் கோஷியும், ஹேப்பி வெட்டிங், ஒரு முறை வந்து பார்த்தாயா, நாதொலி ஒரு சிறிய மீனல்ல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Share this story