நடிகர் யாஷை இயக்கும் பெண் இயக்குனர்... விரைவில் வெளியாகும் அறிவிப்பு !

yash

கேஜிஎப் நடிகர் யாஷை வைத்து பிரபல பெண் இயக்குனர் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபல இயக்குனராகவும், நடிகையாகவும் இருப்பவர் கீது மோகன்தாஸ். தமிழில் ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பிறகு மாதவன் நடிப்பில் வெளியான ‘நளதமயந்தி’ படத்தில் கதாநாயகிக்கு நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 

yash

பின்னர் ‘லயர் டயஸ்’ என்ற படத்தை இயக்கி மலையாளத்தில் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். இதையடுத்து மலையாளத்தில் நிவின் பாலியை வைத்து ‘மூத்தோன்’ படத்தை இயக்கினார். மலையாளம் மற்றும் இந்தி என இரு மொழிகளில் இந்த படம் உருவாகி வரவேற்பை பெற்றது. 

yash

இந்நிலையில் கேஜிஎப் நடிகர் யாஷை வைத்து புதிய படம் ஒன்றை பெண் இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கவுள்ளார். சமீபத்தில் யாஷை சந்தித்த கீது மோகன்தாஸ் கதை ஒன்றை கூறியதாகவும், அந்த கதை பிடித்ததால் படத்திற்கு ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. 

Share this story