விரைவில் வெளியாகும் அடுத்த பட அறிவிப்பு... வதந்திகளை நம்பவேண்டாம் என நடிகர் யாஷ் வேண்டுகோள் !

yash

 வதந்திகளை நம்பவேண்டாம் என்று நடிகர் யாஷ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். 

‘கேஜிஎப்’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் யாஷ். ‘கேஜிஎப்’ படத்திற்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்து பான் இந்தியா நாயகனாக வலம் வருகிறார். அதனால் அவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் ஆர்முடன் காத்திருக்கின்றனர். 

yash

அதேநேரம் பாலிவுட் இயக்குனர் நிலேஷ் திவாரி இயக்கத்தில் இராமாயணக் கதையில் ராவணனாக யாஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. யாஷ் அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் ஹீரோவிற்கான மவுசு குறைந்துவிடும் என்பதால் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 

yash

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் நஞ்சனக்கூடுவில் உள்ள கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர் பேசிய அவர், என் மீதான இருக்கும் பொறுப்பை உணர்ந்து கவனத்துடன் செயல்பட்டு வருகிறேன். நீண்ட நாட்களாக அடுத்த படத்திற்காக உழைத்து வருகிறோம். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுவது என்னுடைய பொறுப்பு. அதை சரியாக செய்வேன் . 

மேலும் அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் ரெடியா என செய்தியாளர் கேட்க, ஆம் ரெடியாகிவிட்டது. விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வரும். பாலிவுட் படத்தில் நடிப்பதாக வெளியான செய்திக்கு பதிலளித்த அவர், நான் எங்கும் செல்லவில்லை. வதந்திகளை நம்பவேண்டாம் என்று மறுத்தார். 

 

 


 

 

Share this story