தென்னிந்திய நடிகர்களை ஓரங்கட்டிய அல்லு அர்ஜூன்.. சம்பளத்தை கேட்டா தலைசுத்துது !

allu arjun

தனது புதிய படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூன் கேட்டுள்ள சம்பளம் திரையுலகில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் மாஸ் ஹீரோவாக மாறியிருக்கிறார் அல்லு அர்ஜூன். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த படத்திற்கு ‘புஷ்பா 2’ படத்தில் அவர் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள இந்த படத்தின் ப்ரீ பிசினஸ் மட்டும் ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. 

allu arjun

தற்போது பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்துள்ள அவர்,  பூஷன் குமார் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார். பிரம்மாண்டமாக தயாராகும் இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிக்க அல்லு அர்ஜூன் 125 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அல்லு அர்ஜூனின் மார்க்கெட் அதிரடியாக உயர்ந்துள்ளதால் இந்த சம்பளம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

‘பாகுபலி’ படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இதற்கு அடுத்தப்படியாக ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் 75 கோடி சம்பளம் வாங்குகின்றனர். ‘லியோ’ படத்திற்காக நடிகர் விஜய், 110 கோடி சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அல்லு அர்ஜூன் கேட்டுள்ள சம்பளம் தென்னிந்திய சினிமாவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Share this story