‘கைதி’ பட இந்தி ரீமேக்கில், அமலா பால் ; வெளியான சூப்பர் தகவல்.

அமலா

‘கைதி’ பட இந்தி ரீமேக்கில் நடிகை அமலா பால் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

அம்லாபால்

தமிழில் லோகேஷ் மற்றும் கார்த்தி கூட்டணியில்  வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம்கைதி’. தற்போது இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்களும், நடிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கைதி திரைப்படம்  இந்தியில்போலாஎன்ற பெயரில் ரீமேக்காக உள்ளது. இந்த படத்தை முன்னணி நடிகரான அஜய் தேவ்கனே இயக்கி, நடிக்கவுள்ளார்.

கைதி

போலாபடத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை அமலாபால் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பாலிவுட் கதைகளத்திற்கு எற்ப கதையில் சில மாற்றங்கள் செய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது ,இந்த  படத்தை அஜய் தேவ்கன், டி சீரிஸ், ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மென்ட், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.

கைதி

டீச்சர், கிறிஸ்டோபர், திவிஜா, ஆடுஜீவிதம்ஆகிய மலையாள  படங்களை அமலாபால் கைவசம் வைத்துள்ள நிலையில் தற்பொழுது இந்தி படமானபோலாபடத்திலும் நடிக்க இருக்கிறார், அமலா பாலிம் முதல் இந்தி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this story