அனுஷ்காவிற்காக பாடல் பாடும் தனுஷ்... இது வேற லெவலா இருக்கே !

Anushka

 நடிகை அனுஷ்கா நடிக்கும் படத்தில் பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்ஸஸ் பொலிஷெட்டி'. இந்தப் படத்தில் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக  நடித்து வருகிறார்‌. 

Anushka

யு வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிபதிவு செய்கிறார். பிரபல இயக்குனர் மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ரதன் இசையமைத்து வருகிறார். காதல் மற்றும் காமெடியுடன் உருவாகும் இந்த படம் உணவை மையமாக வைத்து உருவாகி வருகிறது. இந்த படத்தில் சமையல் கலைஞராக நடிகை அனுஷ்கா நடித்துள்ளார். 

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாடவுள்ளார். முதல் பாடலாக உருவாகும் இந்த பாடல் ஃப்ர்ஸ்ட் சிங்கிளாக விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடல் திரையுலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  ‌ 

Share this story