நடிகை திவ்யா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி

நடிகை திவ்யா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி

நடிகை திவ்யா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது

நடிகை திவ்யா உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி

கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட ரம்யா, சில ஆண்டுகளுக்கு முன்பாக திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். பின்னர் அரசியலில் இருந்தும் ஒதுங்கினார். தற்போது 40 வயதான நடிகை திவ்யா, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இந்நிலையில், நடிகை திவ்யா ஸ்பந்தனா ஜெனீவாவில் உடல்நலத்துடன் உள்ளதாக அவரது தோழி சமூக வலைதளத்தில் தகவல் தெரிவித்துள்ளார். நாளை பெங்களூரு திரும்புவார் எனவும் அவரது தோழி குறிப்பிட்டுள்ளார்.

Share this story