உடல்நலக்குறைவால் காலமான பிரபல நடிகையின் தந்தை..!!

நடிகை காவ்யா மாதவனின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார்.
மலையாள திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் காவ்யா மாதவன்.. இவர் தமிழில் ‘என் மன வானில்’, விக்ரமுடன் ‘காசி’, ‘சாது மிராண்டா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 2000ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 2011ம் ஆண்டு வரை மல்லுவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தார். முதலில் தொழிலதிபர் ஒருவரை மணம் முடிந்த காவ்யா, குறுகிய காலத்திலேயே அதிலிருந்து வெளியேறினார். பின்னர் தனது சக நடிகர் திலீப்பை 2016ல் மறுமணம் செய்து கொண்டார். இருவரும் திரைப்படங்களில் இணைந்து நடித்த போதே, இந்த ஜோடிக்கென தனி ரசிகர்கள் இருந்தனர். தற்போது நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் இவர்களுக்கு மகாலட்சுமி என்கிற பெண் குழந்தை உள்ளது.
நடிகை காவ்யா மாதவனின் தந்தை பி.மாதவன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75. இவருக்கு சியாமளா என்கிற மனைவியும், காவ்யா தவிர மிதுன் என்கிற மகனும் இருக்கின்றனர். மகன் மற்றும் மருமகள் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றனர். கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள நீலேஸ்வரம் என்னும் ஊரை பூர்வீகமாகக் கொண்டவர். ஆகையால் இறுதிச்சடங்குகளுக்காக பி.மாதவன் அவர்களின் இடல் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது.