கியாராவிற்கு வித்தியாசமாக வாழ்த்து... ‘RC15’ படக்குழுவின் அசத்தல் வீடியோ !

சித்தார்த் - கியாரா அத்வானி ஜோடிக்கு ‘RC15’ படக்குழுவினர் வித்தியாசமாக திருமண வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நீண்ட நாட்களாக சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வந்த கியாரா அத்வானி, கடந்த 7-ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். ராஜஸ்தான் அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த திருமண நிகழ்வு நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில் ‘RC15’ படக்குழுவினர் படப்பிடிப்பின் போது வித்தியாசமான முறையில் சித்தார்த் - கியாரா ஜோடிக்கு திருமண வாழ்த்து தெரிவித்தனர். படப்பிடிப்பின் போது படக்குழுவினர் அனைவரும் ஒன்றுக் கூடி கியாராவிற்கு திருமண வாழ்த்துக்கள் என்று ஒன்றாக பூக்களை தூவிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பாலிவுட் நடிகர் கியாரா அத்வானி. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில் கியாராவின் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் சமீபத்தில் நிறைவுபெற்றது. தற்போது ராம் சரண் மட்டும் நடிக்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
Team #RC15 wishing Siddharth and Kiara a happy married life. pic.twitter.com/i0RfTgcJnA
— LetsCinema (@letscinema) February 13, 2023