நானிக்கு ஜோடியாகும் மிருணாள் தாக்கூர்... சம்பளம்‌ எவ்வளவு தெரியுமா ?

mrunal thakur

நடிகை மிருணாள் தாக்கூர் அடுத்த படத்திற்காக வாங்கும் சம்பளம் ரசிகர்களை வாயடைத்துள்ளது.‌

தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த திரைப்படம் ‘சீதாராமன்’. இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக மிருனாள் தாகூர் நடித்திருந்தார். ராணுவ வீரருக்கும், மகாராணிக்கும் இடையேயான காதலை வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியான மிருனாள் தாகூர் ரசிகர்களிடையே மிகுந்த கவனம் பெற்றார்.

 nani 30

இந்த படத்திற்கு நானி நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நானியின் 30வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மிருணாள் தாக்கூரின் சம்பளம் வாயடைக்க செய்துள்ளது. அதன்படி இப்படத்தில் அவர் 6 கோடி சம்பளம் பேசியுள்ளாராம்.

nani 30

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் இவ்வளவு சம்பளம் வாங்காத நிலையில் மிருணாள் தாக்கூரின் கேட்டுள்ள சம்பளம் வாயடைக்க செய்துள்ளது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தலா 2 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர மலையாளத்திலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  ‌ 

 

Share this story