ப்ர்த்டே கொண்டாடும் தென்னியாவின் குயின்... குவியும் பட அப்டேட்டுகள் !

samantha

நடிகை சமந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'குஷி' படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தென்னிந்தியாவின் பியூட்டி குயினாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்தியாவில் இவருக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் நடிகையாக சமந்தா இருக்கிறார். 

samantha

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘சகுந்தலம்’ திரைப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து குஷி மற்றும் சிட்டாடல் வெப் தொடர் ஆகிய இரண்டிலும் தற்போது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையே கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் சமந்தா பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சினிமாவில் இருந்து சில மாதங்கள் ஓய்வெடுத்து வந்த சமந்தா மீண்டும் பிசியாக நடித்து வருகிறார்.  

இந்நிலையில் நடிகை சமந்தா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் நடிப்பில் உருவாகும் அடுத்தடுத்த திரைப்படங்களின் அப்டேட்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகி வரும் 'குஷி' படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story