என்னவொரு அழகான படம்... 'சகுந்தலம்' படத்தை பார்த்து மெய்சிலிர்த்த சமந்தா !

samantha

'சகுந்தலம்' படத்தை பார்த்த நடிகை சமந்தா, இயக்குனர் குணசேகரனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

‘ருத்ரமா தேவி’ உள்ளிட்ட புகழ்பெற்ற காவியப் படங்களை இயக்கிய குணசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சகுந்தலம்‘. இந்த படத்தில் நடிகை சமந்தா, சகுந்தலை என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன், துஷ்யந்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

samantha

இவர்களுடன் மோகன்பாபு, கௌதமி, ஈஷார் ரெப்பா உள்ளிடடோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதுதவிர அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். காளிதாஸ் எழுதிய புராண கதையான சகுந்தலத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. 

samantha

மகாபாரதத்தில் விசுவாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்தவள் சகுந்தலை. கணவரை பிரியும் சகுந்தலை எவ்வாறு மீண்டும் இணைகிறார் என்பது படத்தின் கதை. தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படம் வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு முறை ரிலீஸ் அறிவிக்கப்பட்ட இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படம் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகும் என புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்த இன்று சமந்தா, நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதில் இந்த படத்தின் மூலம் என் இதயத்தை கவர்ந்துள்ளீர்கள். என்ன ஒரு அழகான படம். இந்த அழகான காவியத்திற்கு உயிர் கொடுத்துள்ளீர்கள். உணர்ச்சி மிகுந்த இந்த படத்தை பார்க்கும் பார்வையாளர்களுக்கு அழகான அனுபவம் தரும். எங்கள் மாயாஜால உலகத்திற்கு வரும் குழந்தைகள், புதியதோர் உணர்வை பெறுவார்கள். இந்த அற்புதமான பயணத்தை கொடுத்த தில் ராஜூ மற்றும் நீலிமான ஆகியோருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.  

 

 

 

இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் வெளியாகாத நிலையில் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சமந்தா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. 

Share this story