கடும் வேதனையை அனுபவித்த சமந்தா... உண்மை போட்டுடைத்த விஜய் தேவரகொண்டா !

kushi

மயோசிடிஸ் பாதிப்பால் நடிகை சமந்தா கடும் வேதனையை அனுப்பவித்தாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். 

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘குஷி’. வரும் செப்படம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா, சமந்தா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 

kushi

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா, ‘குஷி’ படத்தில் நடிகை சமந்தா கஷ்டப்பட்டு நடித்தார். ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் சமந்தாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. முதலில் தனது பிரச்சனை குறித்து சமந்தா பேசாத நிலையில் பின்னர் அவரே வெளிப்படையாக பேசினார்.

kushi

மயோசிடிஸ் நோய் பாதிப்பால் ஒரு கட்டத்தில் எங்களால் அவரிடம் பேச முடியவில்லை. எங்களையும் பார்க்கவில்லை. கடும் வேதனையை அவர் அனுபவித்தார். அந்த நோயிலிருந்து இன்னும் முழுமையாக அவர் குணமடையவில்லை. இங்குள்ள லைட்டால் கூட அவருக்கு பாதிப்பு ஏற்படும். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரித்த முகத்தோடு இருப்பதற்கு காரணம் உங்கள் அன்பு மட்டும்தான் என்று கூறினார்.  

Share this story