விஜய் தேவரகொண்டாவுடன் துருக்கி பறந்த சமந்தா... ‘குஷி’ படத்தின் புதிய அப்டேட் !

‘குஷி’ படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகை சமந்தா துருக்கி நாட்டிற்கு சென்றுள்ளார்.
சிவ நிர்வணா இயக்கத்தில் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் படம் ‘குஷி’. காதல் ரொமென்ஸ் படமாக உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்திற்கு 'ஹ்ரிதயம்' படத்திற்கு இசையமைத்த ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகை சமந்தா துருக்கி நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு விஜய் தேவரகொண்டாவுடன் ரெஸ்டாரண்ட்டில் உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்றை சமந்தா வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், நல்ல கெட்டது, ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்வி என அனைத்தையும் இந்த ஆண்டில் பார்த்துவிட்டேன். ஒரு சிலர் மட்டுமே என்னுடன் உண்மையான அன்புடன் நிற்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். சமந்தாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.