“என் அம்மா மீது எனக்கு வருத்தம் இருக்கு”- முதல் முறையாக மனம் திறந்த சமந்தா.
முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா தனது அம்மா மீது அந்த ஒரு விஷயத்தில் மட்டும் வருத்தம் இருப்பதாக புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, டோலிவுட்டிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அதே போல பாலிவுட்டிற்கும் பிள்ளையார் சுழி போட்டுவிட்டார். ஆனால் மோலிவுட் பக்கம் மட்டும் தலை காட்டாமல் இருந்து வருகிறார். அது குறித்து தான் தற்போது தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அதாவது சமந்தா , தேவ் மோகன் நடிப்பில் தயாராகியுள்ள ‘சகுந்தலம்’ திரைப்படம் இம்மாதம் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. வரலாற்றை பின்னணியாக கொண்ட இந்த படத்தை தெலுங்கு மற்றும் தமிழில் குணசேகரன் இயக்கியுள்ளார்.
படத்தின் வில்லனான தேவ் மோகன் மலையாலத்தில் வெளியான ‘சூபியும் சுஜாதையும்’ படத்தின் மூலமாக பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி கேரளாவில் நடந்தது, அதில் பேசிய சம்ந்தா மனம் திறந்து நிறைய விஷயங்கள் பேசியுள்ளார். சமந்தா கூறியதாவது” எனக்கு மலையாள படங்களை பார்ப்பதிலும் மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்பதிலும் ஆர்வம் அதிகம்.
என் அம்மா ஒரு மலையாளியாக இருந்தும் எனக்கு மலையாளம் கற்று கொடுக்காமல் விட்டு விட்டார். அதனால் அவர் மீது எனக்கும் எப்போதும் ஒரு வருத்தம் உண்டு. ஆனால் மலையாளத்தில் எனக்கு பிடித்தமான நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக மலையாளம் கற்று கொள்வேன். சில சமயங்களில் ஒரே மாதிரியாக நடிக்கிறோமோ என்ற சந்தேகம் உதிக்கும் போதெல்லாம் மலையாள படங்களை பார்த்துதான் நடிப்பில் வித்தியாசம் காட்ட ஐடியா பெற்றுகொளவேன்” என மனம் திறந்து பேசியுள்ளார் சாம்.