ஹாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை ஷோபிதா துலிபாலா
1707047187572

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தவர் சோபிதா துலிபாலா. இதற்கு முன்பாக துல்கர் சல்மான் நடித்த குரூப் படத்தில் இவர் நாயகியாக நடித்திருந்தார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் இவர், இப்போது, 'மங்கி மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். 'ஸ்லம்டாக் மில்லியனர்' தேவ் படேல் இயக்கி நடித்துள்ள இந்தப் படத்தில், விபின் சர்மா, சிக்கந்தர் கெர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஷரோன் மேயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.