சமந்தாவின் முன்னாள்‌ கணவருடன் காதலா ?... மனம் திறந்த பிரபல நடிகை ‌!

shobita dhulipala

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலிப்பதாக வந்த தகவலுக்கு நடிகை சோபிதா துலிபாலா முதன்முதலாக மனம் திறந்து பேசியுள்ளார்.  

தென்னிந்தியாவில் பிரபல நட்சத்திரங்களாக இருந்த நடிகர் நாகசைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் கருத்து வேறுபாட்டால் இரு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டனர். இதையடுத்து நடிகை சோபிதாவுடன் நாகசைதன்யா டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. 

shobita dhulipala

இருவரும் லண்டனில் ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகின. இது குறித்து இருதரப்பினரும் வாய் திறக்காத நிலையில் முதல்முறையாக நடிகை சோபிதா துலிபாலா பேசியுள்ளார். அதில் எனக்கு சினிமா துறையில் ஆர்வம் அதிகம். என்னுடைய கெரியரில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றேன். 

shobita dhulipala

அறிவு இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதனால் எந்த விஷயம் குறித்தும் நான் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று காட்டமாக கூறியுள்ளார். மேலும் ‌ பொன்னியன் செல்வன் போன்ற நல்ல படங்களில் நடித்தது மிகவும் அதிர்ஷ்டமானதாகும். அதிலும் மணிரத்னம் மற்றும் ஏ ஆர் ரகுமான் போன்ற ஜாம்பவான்களுடன் பணியாற்றியது பெரியமாக கருதுகிறேன் என்று கூறினார்.  

Share this story