எனக்கு மனநிலை பாதிப்பா ?... கொந்தளித்த பிரபல நடிகை !

Shruthi Hassan

மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக  வெளியான தகவலுக்கு பிரபல நடிகை விளக்கமளித்துள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியிலும் நடித்து வருகிறார்.  இருப்பினும் சமீபகாலமாக தெலுங்கு மொழியில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கு முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணாவின் வீரா சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். 

Shruthi Hassan

இந்த இரண்டு திரைப்படங்களும் பொங்கலையொட்டி கடந்து சில நாட்களுக்கு முன்பு வெளியாகின. வசூல் சாதனை செய்து வரும் இந்த படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ருதிஹாசன் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து நடிகை ஸ்ருதிஹாசனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் தனக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக வந்த செய்திக்கு நடிகை சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். அதில் எனக்கு வைரல் காய்ச்சல் இருந்ததால் 'வால்டர் வீரய்யா' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. அதோடு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக வந்த செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்த அவர், நல்ல முயற்சி என்று கூறியுள்ளார். 


 

Share this story