சீதாவை மீட்க செல்லும் ராமர்... ‘ஆதிபுருஷ்’ ஜெய் ஸ்ரீராம் பாடல் வெளியீடு !

Adipurush

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்திலிருந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. உச்சபட்ச கிராபிக்ஸ் காட்சிகளுடன் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக தயாராகியுள்ளது. 

Adipurush

இப்படம் வரும் ஜூன் 16-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Adipurush

புதிய யுக ராமரை பார்க்கும் வகையில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சனோன் சீதாவாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். இராமாயணத்தின் ஒரு பகுதியை வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 

Adipurush

இந்நிலையில் இப்படத்திலிருந்து ‘ஜெய் ஸ்ரீராம்‘ வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அஜய் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை முரளிதரன் எழுதியுள்ளார். இராவணமிடம் இருந்து சீதாதேவியை மீட்க லட்சுமணம், அனுமன் மற்றும் வானரக் கூட்டங்களுடன் ராமன் இலங்கைக்கு செல்லும் காட்சிகள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலில் விஎப்எக்ஸ் காட்சிகள் தத்ரூபமாக உள்ளதால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

Share this story