‘ஆதிபுருஷ்’ படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. தடைக்கோரி பிரதமருக்கு கடிதம் !

adipurush

‘ஆதிபுருஷ்’ படத்திற்கு தடைக்கோரி இந்திய சினிமா பணியாளர் சங்கம் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது. 

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்திற்கு இந்தியா முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இந்த படத்தை தடை செய்யக்கோரி பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு காரணம் இப்படத்தில் ராமாயணக் கதாபாத்திரங்களின் தவறான சித்தரிப்பு, முறையற்ற வசனங்கள் என கூறப்படுகிறது. 

adipurush

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தை தடை செய்யக்கோரி அகில இந்திய சினிமா பணியாளர் சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் இப்படத்தின் திரைக்கதை, வசனம் ஆகியவை ராமரையும், அனுமனையும் தவறாக சித்தரித்து களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

adipurush

ராமர், ராவணன் ஆகிய கதாபாத்திரங்கள் வீடியோ கேம் போல இருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் வலியை ஏற்படுத்துகிறது. அதனால் இந்த படத்தை உடனடியாக தடை செய்யவேண்டும். இந்த படத்தின் குழுவினர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கவேண்டும். இந்த படத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் ஆகியோர் நடித்திருக்கக்கூடாது. ராமர் மீதும், இராமாயணத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை ஆதிபுருஷ் கெடுத்துவிட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


 

Share this story